புதிய மின்மாற்றி அமைப்பு

விளாத்திகுளம் அருகே புதிய மின்மாற்றி அமைப்பு

Update: 2022-06-01 16:23 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளில் குறைந்த அழுத்த மின்வினியோகம் காரணமாக மின் சாதனங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டது. மேலும் மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாமலும், விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புதிய மின்மாற்றி அமைக்க வேண்டுமென விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கோரிக்கையை ஏற்று மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. முயற்சியால் ராமச்சந்திராபுரம் கிராமத்தில் மின் வாரியத்தின் சார்பில் 63 கே.வி.ஏ திறன்கொண்ட மின்மாற்றி புதிதாக அமைக்கப்பட்டது. இதனை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தார். ராமச்சந்திராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சீதா லட்சுமி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்வகுமார் மற்றும் பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்