வடவாம்பலத்தில் புதிய மின்மாற்றி

வடவாம்பலத்தில் புதிய மின்மாற்றியை லட்சுமணன் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.

Update: 2023-06-30 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடவாம்பலத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு அதன் இயக்க விழா நடைபெற்றது. விழாவில் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில மருத்துவ அணி இணைச்செயலாளருமான டாக்டர் இரா.லட்சுமணன் கலந்துகொண்டு புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார்.

இவ்விழாவில் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் லிங்கேஸ்வரி ஜவகர், துணைத்தலைவர் வடிவேல், கட்சி நிர்வாகிகள் அசோக்குமார், தங்கபால், சச்சிதானந்தம், அன்பழகன், முருகன், லட்சகன், ஜெயபால், தட்சிணாமூர்த்தி, அருள், இளவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்