புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அனுமதியின்றிசெயல்படும் மதுபான பார்களை மூட வேண்டும். நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருக்க கூடிய தாபா கடைகளை மூட வேண்டும். தாபா கடைகளில் வெளிமாநில மது விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முத்து முன்னிலை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், மகளிரணி சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.