ரூ.30 லட்சத்தில் புதிய ரேஷன் கடை, தார்சாலை

கந்திலி, திருப்பத்தூர் ஒன்றியத்தில் ரூ.30 லட்சத்தில் புதிய ரேஷன் கடை, தார்சாலை பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-05 18:12 GMT

கந்திலி ஒன்றியம் பேராம்பட்டு கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் நல்லதம்பி எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கி, பேராம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பேராம்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ஆர்.குலோத்துங்கன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.ஆர். திருநாவுக்கரசு முன்னிலையில் வகித்தார். செயலாளர் சிட்டிபாபு வரவேற்றார். புதிய ரேஷன் கடையை நல்லதம்பி எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ.மோகன்ராஜ், கே.ஏ. குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயக்குனர் தெய்வக்குமார் நன்றி கூறினார்.

இதனை தொடர்ந்து திருப்பத்தூர் ஒன்றியம் புதூர் நாடு இணைப்புச் சாலையான ஜமனபுதூர் ரோடு முதல் மேற்கத்தியானூர் ரோடு வரை 830 மீட்டர் நீளத்திற்கு திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17 லட்சத்திலும், புது பூங்குளம் அரசு மேல்நிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கழிப்பறை கட்டிடம், சைக்கிள் நிறுத்துமிடம் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞானசெல்வி ஜெய்சங்கர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு தலைவர் விஜியா அருணாச்சலம், மாவட்ட கவுன்சிலர்கள் சத்தியவாணி வில்வம், எம்.ஆர்.ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம், விஜயகுமார் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்