கோணேஸ்வரர் கோவில் தேரில் பூதப்பார் பொருத்தும் பணி

கோணேஸ்வரர் கோவில் தேரில் பூதப்பார் பொருத்தும் பணி நடந்தது.

Update: 2022-07-28 18:00 GMT

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் பிரசித்திப்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான கோணேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தமிழக அரசின் சார்பில் ரூ.28.50 லட்சம் செலவில் புதிய தேர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் தேரின் முக்கிய பாகமான பூதப்பாரை பொருத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்து பூதப்பாரை தேரில் எடுத்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பிரபாகரன், தக்கார் ஆரோக்கியமதன், தேர் ஸ்தபதி வரதராஜன், கணக்காளர் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்