போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் புதிய நடவடிக்கை

அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் புதிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

Update: 2023-09-02 20:01 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் புதிய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

அருப்புக்கோட்டை நகருக்குள் இருந்து மதுரை செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் பாளையம்பட்டி ஊருக்குள் சென்று தான் மதுரை செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இதனால் பாளையம்பட்டி நகருக்குள் சிறிய குறுகலான பாதையில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்காக முத்தரையர்நகர் பகுதியில் இருந்து புறவழிச்சாலை இணைப்பதற்காக புதிய இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சாலையை பெரும்பாலும் கனரக வாகனங்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் பயன்படுத்துவது கிடையாது.

புதிய நடவடிக்கை

இந்தநிலையில் பாளையம்பட்டி ஊருக்குள் இது போன்ற வாகனங்கள் செல்லாமல் தடுக்கும் வகையில் முத்தரையர் நகர் புறவழிச்சாலை இணைப்பு சாலை பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முயற்சியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சரக்கு வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் மற்றும் போலீசார் அந்த பகுதியில் நின்று அந்த வழியாக வந்த சரக்கு வாகனங்களை அதற்காக ஒதுக்கப்பட்ட சாலையில் செல்லும் படி அறிவுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்