ரூ.6¾ கோடியில் புதிய மார்க்கெட்

அரக்கோணத்தில் ரூ.6¾ கோடியில் புதிய மார்க்கெட் கட்டுவதற்கு அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-09-11 19:35 GMT

அரக்கோணம் காந்தி ரோடு பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் புதிய மார்க்கெட் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட கலெக்டர் வளர்மதி, அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் சண்முக சுந்தரம், நகர மன்றத் தலைவர் லட்சுமி பாரி, துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி ஆணையர் ரகுராமன் மற்றும் தி.மு.க. நகர செயலாளர் வி.எல்.ஜோதி, நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்