குடும்ப பிரச்சினையில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கரூரில் குடும்ப பிரச்சினையில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-10 18:44 GMT

புதுப்பெண்

கரூர் தாந்தோணிமலை பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ராகப்பிரியா (வயது 27). இவர் பொரணியில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், சுதர்சன் என்பவருக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில், சுதர்சன் மற்றொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளது ராகப்பிரியாவிற்கு தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வீட்டில் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தற்கொலை

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ராகப்பிரியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் தாந்தோணிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ராகப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராகப்பிரியாவிற்கு திருமணமாகி 2 வாரங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது. புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்