சிறுவர்கள் விளையாட புதிய உபகரணங்கள்

கோத்தகிரி நேரு பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் வகையில் புதிய உபகரணங்கள் பொருத்தப்பட உள்ளது.

Update: 2022-12-07 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி நேரு பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் வகையில் புதிய உபகரணங்கள் பொருத்தப்பட உள்ளது.

நேரு பூங்கா

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் நேரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், வண்ண மலர்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா, கோத்தர் இன மக்களின் கோவில் உள்ளன.

இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நேரு பூங்காவை மேம்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக 15-வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன்படி பூங்காவை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைப்பது, பூங்கா நுழைவு வாயிலில் டிக்கெட் கவுன்டர் மற்றும் கடைகள் அமைப்பது, பூங்காவின் நுழைவுவாயில் பகுதியில் நீரூற்று அமைப்பது உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

புதிய உபகரணங்கள்

பூங்காவின் மைய பகுதியில் 15-வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் செயற்கை நீரூற்று அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்தநிலையில் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி, டிக்கெட் கவுன்டர் கட்டும் பணிகள் மற்றும் பழுதடைந்த நடைபாதைகளை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிறுவர் விளையாட்டு பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு போன்ற உபகரணங்கள் உள்ளன. அங்கு சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் புதிதாக விளையாட்டு உபகரணங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. வாத்து, மீன் போன்று வடிவமைக்கப்பட்ட பொம்மைகள் மீது அமர்ந்து ராட்டினம் போல் சுற்றவும், எதிர் எதிரே அமர்ந்து ஊஞ்சல் ஆடுவது போன்ற உபகரணங்கள் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. வருகிற மே மாத கோடை சீசனுக்கு முன்பு பூங்காவில் மேம்பாட்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அப்போது பூங்கா புதுப்பொலிவுடன் காணப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்