திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை தொழில் பட்டப்படிப்பு
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை தொழில் பட்டப்படிப்பு(3 ஆண்டுகள்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பட்டப்படிப்பு அறிமுகம்
திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு இளங்கலை தொழில் பட்டப்படிப்பு(3 ஆண்டுகள்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சமுதாய கல்லூரி மற்றும் தனியார் தொழில் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் முன்னிலையில் பதிவாளர் திருமுருகன், தனியார் தொழில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் பீம்சிங் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
வேலைவாய்ப்பு
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சமுதாயக் கல்லூரி 3 ஆண்டு இளங்கலை தொழில் படிப்பு மூலமாக உற்பத்தி தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு கற்றுத்தர உள்ளது.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே மாணவர்கள் இதில் சேர்ந்து படிக்கலாம். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பை முடித்ததும் மாணவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.