ரூ.15 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம்
கடையம் அருகே ரூ.15 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
கடையம்:
கடையம் யூனியன் கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து வெய்க்காலிப்பட்டி இந்திராநகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன், ஓ.பி.எஸ். அணி அமைப்பு செயலாளர் ராதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.