அரசு நிதியுதவி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்

சோளிங்கர் அருகே அரசு நிதியுதவி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-10-21 16:27 GMT

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே வடகடப்பந்தாங்கல் கிராமத்தில் அரசு நிதியுதவி நடுநிலை பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர் அனிதா ஸ்டீபன், தலைவர் தாமோதரன், மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிற்புப அழைப்பாளராக சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம் கலந்து கொண்டு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கொண்ட கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னதாக எம்.எல்.ஏ.ைவ மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்