புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம்

புதிய வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2022-06-14 20:27 GMT

திருப்பனந்தாள்:-

திருப்பனந்தாள் அருகே உள்ள திருலோகியில் இருந்து ஆடுதுறை, துகிலி வழியாகவும், கும்பகோணம், ஆடுதுறை, அம்மன்குடி, வடகரை ஆகிய ஊர்கள் வழியாகவும் புதிய பஸ் வசதி தொடக்க நிகழ்ச்சி திருலோகி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா கோவி. செழியன், ராமலிங்கம் எம்.பி, ஆகியோர் கலந்துகொண்டு புதிய பஸ்களின் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் திருப்பனந்தாள் ஒன்றிய துணைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர்கள் இளவரசி, இன்பத்தமிழன், ராஜா, பாலகுரு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்