நுணாக்காடு ஊராட்சி பள்ளியில் புதிய கட்டிடம்
நுணாக்காடு ஊராட்சி பள்ளியில் புதிய கட்டிடம் ஊராட்சி தலைவர் திறந்து வைத்தார்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நுணாக்காடு ஊராட்சி ஆட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.74 ஆயிரத்து 500 மதிப்பில் சமையலறை கட்டிடம், ரூ. 97 ஆயிரத்து500 மதிப்பீட்டில் பள்ளி கழிவறை கட்டிடம், ரூ.2 லட்சத்து 92 ஆயிரத்து 500 மதிப்பில் பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுது நீக்கம் செய்யப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் அஞ்சா.சின்னையன் குத்துவிளக்கேற்றி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை அ.ஜாசி, உதவி ஆசிரியர்கள் முத்துகுமரன், மலர் விழி, சத்துணவு அமைப்பாளர் பஹதூர்நிஷா, ஊராட்சி துணைத் தலைவர் த.துரைராஜ், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.