தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

போடி நகராட்சியில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி நடந்தது.

Update: 2023-08-06 19:45 GMT

போடி நகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சி பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் மற்றும் ஆணையர் ராஜலட்சுமி ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்பேரில் நகராட்சியில் தெருநாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அதில் முதல் கட்டமாக 200 நாய்கள் பிடிக்கப்பட்டது. அந்த நாய்களுக்கு போடி மயானக்கரை ரோட்டில் உள்ள நகராட்சி கருத்தடை மையத்தில் வைத்து விலங்குகள் நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அந்த நாய்களுக்கு கால்நடை மருத்துவர் மூலம் வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்த பணிகள் துப்புரவு ஆய்வாளர்கள் மணிகண்டன், சுரேஷ்குமார், அகமது கபீர், கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்