நெற்குப்பை பேரூராட்சி மன்ற கூட்டம்
நெற்குப்பை பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது
திருப்பத்தூர்
நெற்குப்பை பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற மன்ற கூட்டத்திற்கு செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். நெற்குப்பை பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் புசலான் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். இதனால் துணைத்தலைவராக இருந்த கே.பி.எஸ்.பழனியப்பன் பொறுப்பு சேர்மனாக பதவி ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக இளநிலை உதவியாளர் சேரலாதன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து முன்னாள் சேர்மன் புசலான் மறைந்ததையொட்டி இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவருக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஓய்வு பெறும் செயல் அலுவலர் கணேசனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.