துப்பாக்கி சுடுதல் போட்டியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாருக்கு 3 தங்கப்பதக்கம்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் 3 தங்கப்பதக்கம் பெற்றார்.
சென்னை மருதம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் மாநில அளவிலான போலீஸ் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கம், ரைபிள் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார். இந்த 2 போட்டிகளிலும் ஒட்டுமொத்த சாம்பியனுக்கான தங்கப்பதக்கமும் பெற்றார்.
3 தங்கப்பதக்கங்களை பெற்ற நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாருக்கு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தங்கப் பதக்கத்தையும், பாராட்டு சான்றிதழையும் வழங்கி கவுரவித்தார்.