நெல்லை மாநகர போலீஸ் மோப்பநாய் சாதனை
அகில இந்திய போட்டியில் தங்கம் வென்று நெல்லை மாநகர போலீஸ் மோப்பநாய் சாதனை படைத்தது.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் 5 நாட்கள் நடந்த அகில இந்திய காவல் திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர காவல் மோப்பநாய் பிரிவை சேர்ந்த புளுட்டோ கலந்து கொண்டு தங்கம் வென்று சாதனை படைத்தது. நெல்லை மாநகர போலீசுக்கு பெருமை சேர்ந்த மோப்பநாய் புளுட்டோ மற்றும் பயிற்சியாளர்களான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லியோராயன், தலைமை காவலர் டேனியல் ராஜாசிங் ஆகியோரை நேற்று காலையில் மாநகர போலீ்ஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது துணை போலீஸ் கமிஷனர் (தலைமையிடம்) அனிதா உடன் இருந்தார்.