நெல்லியடி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

குத்தாலம் அருகே நெல்லியடி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது

Update: 2023-04-25 18:45 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே தேரழுந்தூரில் நெல்லியடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா காப்பு கட்டுத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் கரகம் உள்ளிட்ட வழிபாடுகள் நடந்து தீமிதி திருவிழா நடைபெற்றது முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர். பின்னர் கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை தேரழுந்தூர் ஊராட்சி தலைவர் வசந்திராஜாஜி உள்ளிட்ட கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்