நெல்லையப்பர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
நெல்லையப்பர் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் நேற்று 3 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு சீர் வரிசையாக குத்துவிளக்கு, தங்க திருமாங்கல்யம், பட்டு புடவை, பட்டு வேட்டி, பெரிய சில்வர் பாத்திரம் உள்பட 33 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மண்டல தலைவர் மகேசுவரி, அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.