கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த பக்கத்து வீட்டுக்காரர் கைது

எம்.ஜி.ஆர். நகரில் பரபரப்பு சம்பவம் கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த பக்கத்து வீட்டுக்காரர் கைது காப்பாற்றப்போன கணவரையும் கடித்துக்குதறினார்.;

Update:2023-03-22 00:22 IST

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச்சேர்ந்தவர் சுகன்யா (வயது 30). இவரது கணவர் பெயர் சுப்பிரமணி. தற்போது சுகன்யா 5 மாத கர்ப்பமாக உள்ளார். சுப்பிரமணிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத்துக்கும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இதனிடையே இந்தப்பிரச்சினை நாளடைவில் சண்டையாக மாறிப் பெரிய பகையாக மாறிவிட்டது.

இதற்கிடையே சம்பவத்தன்று நடந்த சண்டையில் வினோத், கர்ப்பிணியான சுகன்யாவை காலால் எட்டி உதைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். சுகன்யாவை காப்பாற்றப்போன அவரது கணவர் சுப்பிரமணியை கடித்துக்குதறி இருக்கிறார். காயமடைந்த கணவன், மனைவி இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் வினோத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்