நேரு நர்சிங் கல்லூரி விழா

வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி விழா நடந்தது

Update: 2022-11-23 21:44 GMT

வள்ளியூர்:

வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவிகளுக்கு மூன்றாம் ஆண்டு மாணவிகளால் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மார்க்ரெட் ரஞ்சிதம், துணை முதல்வர் பேபி உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்றாம் ஆண்டு மாணவி ஜூபிட் வரவேற்றார். கல்லூரி தாளாளர் லாரன்ஸ் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. நான்காம் ஆண்டு மாணவிகள் கல்லூரியின் அனுபவங்கள் மற்றும் மறக்க முடியாத சம்பவங்களை பகிர்ந்து கொண்டனர். முடிவில் மாணவி மஞ்சுளாதேவி நன்றி கூறினார்.

* இதேபோன்று கல்லூரியில் புதிதாக வந்த முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை ஆசிரியை செல்வி எஸ்தர் ராணி தொகுத்து வழங்கினார். ஆசிரியை செல்வி அஜிதா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர், தாளாளர் மற்றும் மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்