தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

Update: 2023-06-01 19:30 GMT

எடப்பாடி:-

எடப்பாடி அருகே கோவில் பிரச்சினை ெதாடர்பாக தாசில்தார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

கோவில் பிரச்சினை

எடப்பாடி அடுத்த குரும்பப்பட்டி ஊராட்சி தாணமூர்த்தியூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் சிவராத்திரி அன்று திருவிழா நடைபெறும் போது, மூலவரான பெரியாண்டிச்சி அம்மனுக்கு பதி பூஜை மற்றும் தவ பூஜைகள் நடப்பதும் வழக்கம் ஆகும்.

இந்த நிலையில் கோவிலுக்கு கூடுதலான நிலம் வாங்கப்பட்டது. இதையடுத்து எழுந்த பல்வேறு பிரச்சினைகளை தொடர்ந்து கோவிலின் நிர்வாகம் மற்றும் வரவு-செலவு நிர்வாகம் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் போக்கு உருவானது.

ேபச்சுவார்த்தை தோல்வி

இதையடுத்து நேற்று எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பானுமதி முன்னிலையில் இரு தரப்பினருக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில், அடுத்து வரும் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என வருவாய்த்துறையினர் அறிவித்தனர். இதனிடையே எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் இருதரப்பையும் சேர்ந்த திரளானவர்கள் குவிய தொடங்கினர்.

இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தொடர்ந்து வாய் தகராறில் ஈடுபட்ட நிலையில், அங்கு மோதல் போக்கு உருவானது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கிருந்த இரு தரப்பினரையும் உடனடியாக வெளியேற்றினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்