நீடாமங்கலம் ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் உறுப்பினர்கள் ஆதிஜனகர், பாரதிமோகன், ராஜா, ராஜலெட்சுமி கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்துகொண்டு தங்களது பகுதிகளுக்கு சாலைவசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பேசினர். முன்னதாக ஆறுமுகம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.