சாலை வசதி வேண்டும்

சாலை வசதி வேண்டும்

Update: 2022-06-06 13:12 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதி களத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை பொதுமக்கள் வயல்களுக்குள் இறங்கி எடுத்து செல்லும் அவல நிலை உள்ளது. அதுமட்டுமின்றி மழைக்காலங்களில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்று சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அந்த பகுதிமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், களத்தூர்.

Tags:    

மேலும் செய்திகள்