நெடுவாக்கோட்டை வீரமணவாளன் கோவில் குடமுழுக்கு
நெடுவாக்கோட்டை வீரமணவாளன் கோவில் குடமுழுக்கு
மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் வீரமணவாளன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு குடமுழுக்கு செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 22-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. நேற்று 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடங்களை தலையில் சுமந்து சிவாச்சாரியார்கள் கோவிலை வலம்வந்து கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்தனர். தொடர்ந்து வீரமணவாளன்சாமி, காத்தாயி அம்மன், பச்சையம்மன், சப்தகண்ணிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.