விருத்தாசலம் அருகே பிளஸ் 1 மாணவர் மாயம்
விருத்தாசலம் அருகே பிளஸ் 1 மாணவர் மாயம்
விருத்தாசலம்
விருத்தாசலம் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சதீஷ் ராஜா(வயது 16). திருச்சி சமயபுரம் தனியார் பள்ளியில் தங்கி பிளஸ்-1 படித்து வரும் இவர் அரசு பொதுத் தேர்வை எழுதி உள்ளார்.
இந்நிலையில் விடுதியில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் பள்ளி நிர்வாகம் சதீஷ்ராஜாவை வீட்டுக்கு அனுப்பியது. இதை அறிந்த மாணவரின் தாய் அவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியே சென்ற சதீஷ் ராஜா வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவரை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீஷ் ராஜாவை தேடி வருகின்றனர்.