உளுந்தூர்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து; 11 பேர் காயம்
உளுந்தூர்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயம் அடைந்தனா்.;
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் கிராமத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோ பாதூர் தனியார் திருமண மண்டபம் எதிரே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த இடத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை முன்னாள் சென்று கொண்டிருந்த கார் டிரைவர் திடீரென பிரேக் போட்டு காரை நிறுத்தினார். இதனால் பின்னால் வந்த ஆட்டோ டிரைவர் கார் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை திருப்பினார். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த பாதூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம்(வயது 48), கோபி(24), மாணிக்கம்(55), ராஜேஷ்(27), முத்தம்மாள்(45), அருள்மணி(50) உள்பட 11 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.