தூத்துக்குடி அருகேஅமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அருகே அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-25 18:45 GMT

தூத்துக்குடி அருகே அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன்பு முறை சாரா சங்கங்கள் சி.ஐ.டி.யு. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் ரசல், மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, மாவட்ட பொருளாளர் அப்பாதுரை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அமைப்புசாரா நல வாரியங்களில் முத்தரப்பு குழுக்கள் அமைத்து செயல்படுத்த வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு பண பயன்களை 30 நாட்களில் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் மற்றும் திருமண நிதி ரூ.50 ஆயிரம் உள்ளிட்ட பணப்பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உப்பள தொழிலாளர்கள் அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள ஆன்லைன் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரனார் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்க செயலாளர் மாரியப்பன், உப்பு தொழிலாளர் சங்க தலைவர் பொன்ராஜ், செயலாளர் சங்கரன், பொருளாளர் மணவாளன், வட்டார தீப்பெட்டி தொழிலாளர் சங்க தலைவர் மோகன்தாஸ், பொருளாளர் சித்ரா, மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் கிருஷ்ணன், மாவட்ட பொதுத் தொழிலாளர் சங்க தலைவர் ரவி தாகூர், செயலாளர் பெருமாள், பொருளாளர் சுப்புலட்சுமி, மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க தலைவர் அண்ணா செல்வி, பொருளாளர் சங்கரேசுவரன், மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் வயண பெருமாள், மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவோர் சங்க தலைவர் டென்சிங், மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்க துணை தலைவர் ஆதிமூலம்உள்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்