தூத்துக்குடி அருகேபரியேறும் பெருமாள் சாஸ்தா கோவில் கொடை விழா

தூத்துக்குடி அருகே பரியேறும் பெருமாள் சாஸ்தா கோவில் கொடை விழா நடைபெற்றது.

Update: 2023-05-12 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தகரெட்டிபட்டி பூர்ண புஸ்கலா தேவியர் சமேத பரியேறும் பெருமாள் சாஸ்தா கோவில் கொடை விழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு சாஸ்தாவின் பிறப்பு மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை 6 மணிக்கு சாஸ்தாவுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், மதியம் 12 மணிக்கு சாஸ்தாவுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் சிவனணைந்த பெருமாள், லாடசன்னியாசி, தவசுதம்பிரான், வீரபத்திரபூதத்தார் ஆகிய தெய்வங்களுக்கு மதிய கொடைவிழா நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு பெங்கலிடுதல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. இரவு 12 மணிக்கு பேச்சியம்மன், பிரம்மசக்தி, சுடலைமாடசாமி, கருப்பசாமி ஆகிய தெய்வங்களுக்கு சாமக்கொடை நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மற்றும் கோவில் கமிட்டியினர் செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்