தூத்துக்குடி அருகேதொழிலாளிக்கு அரிவாள்வெட்டு
தூத்துக்குடி அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டப்பட்டார்.
தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி திருமலையாபுரத்தை சேர்ந்தவர் மங்களபாண்டி (வயது 59). தொழிலாளி. இவர் கூட்டாம்புளி பாலம் அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, அங்கு வந்த குலையன்கரிசல் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஹரிசிங் (23) என்பவர், மங்களபாண்டியை வழிமறித்து மது குடிக்க பணம் கேட்டுள்ளார். மங்கள பாண்டி பணம் தர மறுத்ததால், அரிவாளால் வெட்டியுள்ளார். காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிசிங்கை கைது செய்தனர்.