திருச்செந்தூர் அருகே தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி

திருச்செந்தூர் அருகே தொழிலாளி குளத்தில் மூழ்கி பலியானார்.

Update: 2022-10-07 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே சீர்காட்சியை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் நாராயணன் (வயது 30) தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டார். இவருக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் நேற்று மாலையில் தனது நண்பர்களுடன் நா.முத்தையாபுரம் எல்லப்பநாயக்கன் குளத்தில் குளிக்க சென்றுள்ளார். இதில் நாராயணன் மட்டும் தனியாக குளத்தில் குளித்துள்ளார். அப்போது நண்பர்கள் கரையில் இருந்துள்ளனர். ஆனால் குளிக்க சென்ற நாராயணன் வெகு நேரமாக கரை திரும்பாததால் உடனடியாக திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மோகன், பாலசுப்பிரமணியன், பாலகிருஷ்ணன், சேகர், மணிகண்டன், மாரி ஆனந்தராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த நிலையில் நாராயணனின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்