திருச்செந்தூர் அருகே பயணியர் நிழற்குடை:கனிமொழி எம்.பி. திறப்பு

திருச்செந்தூர் அருகே குமாரபுரத்தில் பயணியர் நிழற்குடையை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

Update: 2023-07-14 18:45 GMT

திருச்செந்தூர்:

பயணியர் நிழற்குடை

திருச்செந்தூர் அருகேயுள்ள குமாரபுரத்தில் பயணிகள் வசதிகளுக்காக சாலையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் தலா ரூ.6 லட்சம் மதிப்பில் 2 பயணியர் நிழற்குடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி., வடக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சாலையின் தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், ஆணையாளர் (பொறுப்பு) கமலா, கவுன்சிலர்கள் செந்தில்குமார், தினேஷ் கிருஷ்ணா, நகர செயலாளர் வாள்சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம் வியாபாரிகள் கோரிக்கை

பின்னர் திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.யை சாத்தான்குளம் வியாபாரிகள் சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ், துணைத்தலைவர் அப்பு கண்ணன், ஜூவல்லரி அசோசியேஷன் சங்க தலைவர் முருகேசன் மற்றும் வியாபாரிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், புதிதாக அமையவுள்ள சாத்தான்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தாலுகா அலுவலக வளாகத்திலேயே அமைக்க வேண்டும்' என தெரிவித்திருந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. உறுதி கூறினார். அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகரசபை துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்