திருச்செந்தூர் அருகே வேன் விபத்தில் 13 பேர் படுகாயம்

திருச்செந்தூர் அருகே நடந்த வேன் விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-23 18:45 GMT

திருச்செந்தூர்:

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வெள்ளூர் வடக்கு தெருவை சேர்ந்த பெருமாள்சாமி மகன் ஜெயசூர்யா (வயது 20). இவரும், அதே ஊர் மேலத் தெருவை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் வேல்முருகன் (27) மற்றும் 11 பேர் சிவகாசியிலிருந்து வேனில் கடந்த 20-ந் தேதி திருச்செந்தூருக்கு புறப்பட்டு வந்தனர். வேனை சிவகாசி வெள்ளூர் வடக்குத் தெருவை சேர்ந்த கண்ணபெருமாள் மகன் முத்துபாண்டி (24) ஓட்டினார். திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு மீண்டும் சிவகாசிக்கு புறப்பட்டு சென்றனர்.

திருச்செந்தூர் - காயல்பட்டினம் ரோட்டில் காட்டுமொகதூம் பள்ளி வாசல் அருகே வேன் சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதியது. இதில் வேனில் இருந்த 13 பேர் காயம் அடைந்தனர்.. சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சோனியா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்