தட்டார்மடம் அருகேபஞ்சாயத்து ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

தட்டார்மடம் அருகே பஞ்சாயத்து ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-28 18:45 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே பஞ்சாயத்து ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பஞ்சாயத்து ஊழியர்

தட்டார்மடம் அருகே உள்ள பெருமாள்புரம் மேலத்தெருவை சேர்ந்த லட்சுமண பெருமாள் மகன் கோபால கிருஷ்ணன் (வயது 46). இவர் அழகப்பபுரம் பஞ்சாயத்தில் குடிநீர் திறந்துவிடும் வேலை செய்து வந்ததுடன், கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இவருக்கு மனைவி சுமதி (42) மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கோபாலகிருஷ்ணன், கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டும் அவர் பதிலளிக்காமல் மவுனமாக இருந்து வந்துள்ளார்.

தற்கொலை

நேற்று முன்தினம் உறவினர் உதயகுமார் என்பவரது தோட்டத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அங்கு மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குடும்பத்தினரும், உறவினர்களும் அப்பகுதிக்கு சென்று, அவரது உடலை பார்த்து கதறி அழுத்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ தோட்டத்துக்கு சென்று, அவரது உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்