தலைவாசல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு எரிந்து சேதம்

தலைவாசல் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீடு எரிந்து சேதம் அடைந்தது.

Update: 2022-11-14 20:14 GMT

தலைவாசல்:

தலைவாசல் அருகே சிறுவாச்சூர் ஊராட்சி அன்பு நகரை சேர்ந்தவர் காசியம்மாள் (வயது 62). இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது மகளை பார்க்க வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். நேற்று மாலை சுமார் 4 மணிக்கு வீட்டில் இருந்து டமார் என்று பயங்கர சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள விவசாய நிலத்தில் பம்பு செட்டில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் தகவலின் பேரில் தலைவாசல் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி சேதம் அடைந்தன. வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து அங்கும் இங்கும் சிதறி கிடந்தன.

இது குறித்த தகவலின் பேரில் தலைவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதம் அடைந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்