தாளவாடி அருகேவீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை

தாளவாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் கொள்ளை போனது.

Update: 2023-01-26 21:52 GMT

தாளவாடி

தாளவாடி அருகே உள்ள கும்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேவம்மா (வயது60). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. மாதேவம்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்று விட்டு நேற்று மாலை கும்டாபுரம் வந்தார்.

அப்போது தனது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவை பார்த்தபோது அதிலிருந்த ரூ.2லட்சத்தை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்மநபர், கதவின் பூட்ைட உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து அதிலிருந்த ரூ.2லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாதேவம்மா தாளவாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்