தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம்; தென்னை-வாழைகள் நாசம்

தாளவாடி அருகே தோட்டத்தில் புகுந்து யானை கூட்டம் தென்னை-வாழைகளை நாசப்படுத்தியது.

Update: 2022-08-27 21:45 GMT

தாளவாடி

தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட சேஷன்நகர் கிராமத்தை சேர்ந்தவர் வரதப்பன் (வயது 47). இவர் தன்னுடைய 5 ஏக்கர் தோட்டத்தில் நேந்திரம் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 யானைகள் வரதப்பனின் தோட்டத்துக்குள் புகுந்து வாழையை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின.

சத்தம் கேட்டு தோட்டத்துக்கு ஓடிவந்து பார்த்த வரதப்பன் யானை கூட்டம் வாழைகளை நாசம் செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே செல்போனில் அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் அங்கு திரண்டு வந்த விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் எழுப்பி யானைகளை விரட்ட முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. அதிகாலை 6 மணி வரை வாழைத்தோட்டத்தை நாசப்படுத்திவிட்டு யானைகள் தானாக காட்டுக்குள் சென்றன.

யானைகள் சேதப்படுத்தியதில் 2 ஏக்கர் வாழைகள், 10 தென்னை மரங்கள் நாசமாயின.

சேதமடைந்த வாழைகளுக்கு வனத்துறையினர் இழப்பீடு பெற்று தரவேண்டும் என்றும், யானைகள் காட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அகழி அமைக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்