ஸ்ரீவைகுண்டம் அருகேதொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: 4பேர் சிக்கினர்
ஸ்ரீவைகுண்டம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய 4பேர் கைது செய்யப்பட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர்அன்னராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பெபின் செல்வ பிரிட்டோ மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பத்மநாபமங்கலம்குளம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஸ்ரீவைகுண்டம் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர், முத்துபலவேசம் மகன் தேவராஜ் (20), வல்லநாடு பகுதியைசேர்ந்த சுப்ரமணியன் மகன் பேச்சித்துரை (23), முருகன் மகன் அடைக்கலம் (26) மற்றும் பத்மநாபமங்கலத்தை சேர்ந்த 19 வயது வாலிபர் என தெரிய வந்தது. தொடர் விசாரணையில், அப்பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட தேவராஜ் மீது ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் போலீஸ் கொலை முயற்சி உட்பட 7 வழக்குகளும், செய்துங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு என மொத்தம் 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.