ஸ்பிக் நகர் அருகேஓட்டலில் பணம் திருட்டு
ஸ்பிக் நகர் அருகே ஓட்டலில் பணம் திருடப்பட்டுள்ளது.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் 3-வதுதெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் கார்த்திக் (வயது 29). இவர் எம். சவேரியார்புரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 1 மணிக்கு ஓட்டலை அடைத்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும் நேறறு காலை 7 மணி அளவில் ஓட்டலுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கடைதிறந்து கிடந்துள்ளது. கடை உள்ளே பணப்பெட்டியில் இருந்த ரூ.800 திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.