சாத்தான்குளம் அருகேசூதாடிய 4 பேர் கைது

சாத்தான்குளம் அருகே சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-09-15 00:15 IST

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே இரட்டைகிணறு குளத்துக்கரையில் சிலர் காசு வைத்து சீட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சீட்டு விளையாடி கொண்டு இருந்தவர்களை சுற்றி வளைத்தனர். சிலர் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் துரத்தி சென்று 4 பேரை பிடித்தனர். விசாரணையில், அவர்கள் நெல்லை பாரதியார் நகர் தங்கபாண்டி மகன் ராஜா (வயது 34), தூத்துக்குடி மணிகண்டன் மகன் சத்தியராஜ் (31), கோமானேரி இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (42), வெள்ளூர் சங்கரபாண்டி மகன் சங்கரலிங்கம் (30) என தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.39ஆயிரத்து 700, சீட்டுக்கட்டு மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்