ரெயில்நிலையம் அருகே வங்கியில் தீ; கம்ப்யூட்டர்கள் நாசம்

மதுரை ரெயில் நிலையம் அருகே உள்ள வங்கியில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கம்ப்யூட்டர் கள் நாசம் அடைந்தன.

Update: 2023-09-23 20:58 GMT


மதுரை ரெயில் நிலையம் அருகே உள்ள வங்கியில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கம்ப்யூட்டர் கள் நாசம் அடைந்தன.

வங்கியில் தீ

மதுரை ரெயில் நிலையம் அருகே மேலவெளி வீதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ள தளங்களில் வங்கியின் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் 5-க்கும் மேற்பட்ட காவலாளிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வங்கியை இரவு நேரங்களில் போலீசார் சென்று ஆய்வு செய்து நோட்டில் கையெழுத்து போட்டு செல்வது வழக்கம்.

அதே போன்று நேற்று முன்தினம் நள்ளிரவு 1.35 மணிக்கு திலகர்திடல் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வங்கியை ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது முதல்தளத்தில் ஒயர் எரிவதை கண்டு காவலாளிக்கு தகவல் கொடுத்தார். மேலும் தகவல் அறிந்து இரவு ரோந்து பணியில் இருந்த திலகர்திடல் இன்ஸ்பெக்டர் சங்கரும் அங்கு விரைந்து வந்தார். அதற்குள் முதல் தளத்தில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

கம்ப்யூட்டர்கள் எரிந்து நாசம்

இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த விபத்து ஏற்பட்ட பகுதியான முதல் தளத்தில் வரவேற்பு பகுதி மற்றும் கம்ப்யூட்டர் மற்றும் முக்கிய மின்சாதனங்களின் ஜங்சன்பாக்ஸ் உள்ள இடமாக இருக்கிறது. இங்கு ஒயரில் ஏற்பட்ட தீ பொறியால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

விபத்தில் அங்கிருந்த ஏ.சி.மரச்சாமான்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவை எரிந்து நாசமானது. விபத்தை உடனே போலீசார் கண்டறிந்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்ததால் தீ மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

லாக்கர் பணம் தப்பியது

மேலும் தீ விபத்து நடந்த வங்கியின் பிரதான கிளையாகும். இங்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிளைகளில் இருந்து வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் டெபாசிட் தொகை இங்கு தான் பாதுகாக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடந்த தீ விபத்து அதிர்ஷ்டவசமாக பணம் வைக்கப்பட்டிருந்த தளத்தில் தீ பரவவில்லை. இதனால் வங்கியின் லாக்கரில் இருந்த பணம் தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்