புஞ்சைபுளியம்பட்டி அருகே பிரிட்ஜ் வெடித்து சிதறியதால் வீட்டின் மேற்கூரை உடைந்தது

புஞ்சைபுளியம்பட்டி அருகே பிரிட்ஜ் வெடித்து சிதறியதால் வீட்டின் மேற்கூரை உடைந்து விழுந்தது.;

Update: 2022-12-05 22:43 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி அருகே பிரிட்ஜ் வெடித்து சிதறியதால் வீட்டின் மேற்கூரை உடைந்து விழுந்தது.

தீ எரிந்தது

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பெரிய புதூர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 30). கூலி தொழிலாளி. இவர் ஓட்டு வீ்ட்டில் வசித்து வருகிறார்.

நேற்று காலை சேகர் பவானிசாகரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார்.

இந்தநிலையில் மதியம் 2 மணிஅளவில் அவருடைய வீட்டுக்குள் புகையுடன் தீ எரிவது தெரிந்தது.

மேற்கூரை உடைந்தது

சிறிது நேரத்தில் வீட்டின் மேற்கூரை டமார் என்ற சத்தத்துடன் உடைந்து விழுந்தது. உடனே அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று தீைய அணைக்க முயன்றார்கள்.

ஆனால் முடிய வில்லை இதுபற்றி சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள்.

பிரிட்ஜ் வெடித்தது

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். ஆனால் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், துணிமணிகள் எரிந்து நாசமானது.

மின் கசிவு காரணமாக பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்