புஞ்சைபுளியம்பட்டி அருகேமோட்டார்சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி சாவுபோலீஸ்காரர் மனைவியுடன் படுகாயம்

புஞ்சைபுளியம்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தாா். போலீஸ்காரர் மனைவியுடன் படுகாயம் அடைந்தாா்

Update: 2023-09-01 21:53 GMT

 புஞ்சைபுளியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் போலீஸ்காரர் மனைவியுடன் படுகாயம் அடைந்தார்.

மோட்டார்சைக்கிள்கள் மோதல்

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 38). கூலி தொழிலாளி. இவர் கடந்த 25-ந் தேதி புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது எதிரே ஆலபாளையத்தை சேர்ந்த பழனி பட்டாலியன் பிரிவில் போலீசாக இருக்கும் நவீன்குமார் (24) மனைவி சவுந்தர்யாவுடன் ேமாட்டார்சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார். அப்போது கண்இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்டன.

விசாரணை

இந்த விபத்தில் மோட்டார்சைக்கிள்களில் இருந்து மயில்சாமி, நவீன்குமார், சவுந்தர்யா 3 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து 3 பேரையும் மீட்டு மயில்சாமியை சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கோவை அரசு ஆஸ்பத்திாிக்கும், நவீன்குமாரையும், சவுந்தர்யாவையும் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மயில்சாமி நேற்று மாலை பரிதாபமாக இறந்துவிட்டார்.

இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்