புதுக்கோட்டை அருகேமனைவியை துன்புறுத்திய ராணுவவீரர்
புதுக்கோட்டை அருகே மனைவியை துன்புறுத்திய ராணுவவீரர் மீது போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது,
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் துறையூரை சேர்ந்தவர் சரண்யா (வயது 28). இவருக்கும், தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்த விநாயகமூர்த்தி (32) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. விநாயக மூர்த்தி ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் விநாயகமூர்த்தி, வீட்டு செலவுகளுக்கு சரிவர பணம் கொடுக்காமலும், தொடர்ந்து சரண்யாவை துன்புறுத்தியும் வந்தாராம். இது குறித்து சரண்யா அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.