பெரியகுளம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு

பெரியகுளம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2022-11-13 18:45 GMT

தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35). நேற்று இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து மோட்டார் சைக்கிளில் கொடுவிலார்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். பெரியகுளம் அருகே வடுகப்பட்டி பைபாஸ் சாலையில் வந்தபோது மணல் திட்டில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியதில் கண்ணன் தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்ைச பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்