பெரியகுளம் அருகே ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
வைகாசி பவுர்ணமியையொட்டி பெரியகுளம் அருகே ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
வைகாசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலை மகாலட்சுமி கோவிலில் ராமர், ஆஞ்சநேயருக்கு பஞ்ச சூதா ஹோமம் நடைபெற்றது. பின்பு 12 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெத்தலை, எலுமிச்சை, துளசி மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து மல்லிகை பூ, ரோஜா பூ, செவ்வந்தி பூ, தாமரை பூ கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் தேனி மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.