பெரியகுளம் அருகேதூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-21 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பாலு மகள் தனலட்சுமி (வயது 26). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த அழகுமுருகன் மகன் கார்த்திக் ராஜா என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனலட்சுமி அரசு பணிக்கான தேர்வு எழுதுவதற்காக டி.கள்ளிப்பட்டியில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்தார். அங்கு வந்த அவர் யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனலட்சுமிதற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனலட்சுமிக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்து மாதவனும் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்