பண்ணாரி சோதனைச்சாவடி அருகே காட்டு யானை நடமாட்டம்
பண்ணாரி சோதனைச்சாவடி அருகே காட்டு யானை நடமாடி வருகிறது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் பண்ணாரி சோதனைச்சாவடி உள்ளது. தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து யானைகள் அடிக்கடி வெளியேறி பண்ணாரி சோதனைச்சாவடி அருகே உள்ள திம்பம் மலைப்பாதையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு ஆண் யானை ஒன்று பண்ணாரி சோதனைச்சாவடிக்கு வந்தது. பின்னர் அந்த காட்டு யானை சோதனைச்சாவடி பகுதியில் சுற்றித்திரிந்தது. காட்டு யானையை கண்டதும், சோதனைச்சாவடி பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் காட்டு யானை அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.