பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வாகனத்தை வழிமறித்த காட்டு யானை

பண்ணாரி சோதனைச்சாவடி அருகே வாகனத்தை வழிமறித்த காட்டு யானை

Update: 2023-09-19 21:58 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பண்ணாரி சோதனைச்சாவடி அருகே உள்ள திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. பின்னர் அந்த காட்டு யானை அங்கு நின்று கொண்டு கரும்பு ஏற்றிய வாகனங்கள் எதுவும் வருகிறதா? தேடியது. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை காட்டு யானை திடீரென வழிமறித்தது. சிறிது நேரம் வரை அங்கேயே நின்று கொண்டிருந்த காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்